search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவாஸ் ஷெரிப்"

    • பைசாகி திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 2,400 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
    • ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது என்றார் மரியம் நவாஸ்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 2,400 சீக்கியர்கள் யாத்திரையாக சென்றுள்ளனர்.

    இந்நிலையில், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சாகிப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் பங்கேற்றார். அப்போது சீக்கிய யாத்திரிகர்கள் குழுவைச் சந்தித்தார். அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த யாத்திரிகர்கள்.

    அப்போது பேசிய மரியம் நவாஸ், ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது. அவர்களுக்காக இதயத்தைத் திறக்கவேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பாக, தனது தந்தை நவாஸ் ஷெரிப் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

    மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு வலியும் ஏற்பட்டது.

    இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அறிவியல் மருத்துவ நிறுவன மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக நவாஸ் ஷெரிப்பிற்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் அறிவித்தனர்

    எனவே,, மருத்துவமனையில் இருந்து அவரை மீண்டும் சிறைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருந்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மற்றும் மருமகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், முதலில் சிறைக்கு செல்ல விரும்பாத நவாஸ் ஷெரிப் அவரது மகள் மற்றும் மருமகனின் அலோசனைக்கு பிறகு மீண்டும் சிறைக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார்

    இதைத்தொடர்ந்து, 11 பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மருத்துவமனையில் இருந்து நவாஸ் ஷெரிப் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார்.

    அடுத்த சில தினங்களில், அல்ட்ராசவுண்ட் மற்றும் இதயம் தொடர்பான மேலும் சில பரிசோதனைகள் செய்துகொள்ள நவாஸ் ஷெரிப்பிற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #NawazSharif
    வெளிநாடு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்து இன்று உத்தரவிட்டுள்ளது. #NawazSharif
    இஸ்லாமாபாத் :

    அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளது தொடர்பான வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

    நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்ஷூம் நவாஷ், புற்று நோயினால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவரை சந்தித்து நலம் விசாரிக்க இங்கிலாந்து செல்ல அனுமதி வேண்டும் என ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் நவாஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கை தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நவாஷ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ள சமயத்தில் நவாஷ் மற்றும் அவரது மகள் நாட்டை விட்டு வெளியே செல்வதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. #NawazSharif
    ×